skip to main |
skip to sidebar
நானும் நதி தான்
உன்னால்!
நேற்று
வற்றி கிடந்தேன்!
இன்று
காதல் வெள்ளம்!
காதல் போர்க்களம் தான்!
இரவும் பகலும்
தூக்கம் விழிக்கிறேன்!
என் வாழ்கையை
புரட்டிப்பார்கிறாய்!
பின் எழுதியது
நீ என
கைஎழுத்திடுகிறாய்!
உன்னை வெறுக்க
நான் எடுக்கும்
சபதமும்,
அதை அப்போதே
அழிக்கும்
அபத்தமும்........
மீண்டும் என்னைத்தேடு
உந்தன் மறுமுனையில்
ஒழிந்து கிடக்கிறேன்!
ஊமை வெண்ணெய்க்கட்டி
நான்!
உச்சி வெயில் நீ!
நீ என்ன சூரியனா?
நான் என்ன பூமியா?
எத்தனை முறை
சுற்றினாலும்
ஏற்றுக்கொள்ள மாட்டேன்
என்கிறாய்!!!!!