Monday, January 11, 2010

நீ என்ன சூரியனா?
நான் என்ன பூமியா?
எத்தனை முறை
சுற்றினாலும்
ஏற்றுக்கொள்ள மாட்டேன்
என்கிறாய்!!!!!


உன்னைத் தேடும்
வழியில்
என்னைத் தொலைத்துவிட்டு
விழிக்கிறேன்..........
தொலைந்தது
உன்னில் என்று
தெரியாமல்.........

Sunday, January 10, 2010

உன்னில்....

கடவுளைக் காணும்
வழியில்
உன்னைக் கண்டேன்!!
உன்னில் இடறி
விழுந்தேன்!
உன்னிலிருந்து தப்பிக்கும்
சூத்திரம்
கற்றுத் தந்தாய்!!
உன்னிலிருந்து விலக
எண்ணும் மனதை
கொன்று விட்டு!!



என்னுடையவை இல்லாதவற்றை
நான் ஏன்
விரும்ப வேண்டும்??
நான் என்னை
விரும்பும் போது
உலகம் என்னைத்
தொடரும்.......

Wednesday, January 6, 2010

என் நிலை,,,

தீப் பிழம்புகள் மழையைப்
பொழியும் நேரம்....

தீண்டும் தென்றல்
பொய்யாய் மாறும் தருணம்....

இது என் நிலை..
இறக்கமட்றவனே...........

என்னில் புகுந்து,
என்னைத் திருடுகிறாய்!
இதை உன்னில் காணுகிறேன்!!

பெண்மையின் நாணம் உணரும்
வன்மையான மின்னலின்
தோற்றம் நீ!

ஒரு முறை சொல்லி விடு
நீ எனக்கு மட்டும் என்று....

உன் காதலை சொல்ல
என் காலம் முடியும் வரை
காத்திருக்க வேண்டுமானால் சொல்...

இப்பொழுதே இறந்து போகிறேன்....

நண்பனல்ல.....

உன் காதலை-என்
காதில் ஓதும் நேரம்...
செவ்வானச் சூரியன் போல்
சிவக்கும் என் கன்னங்கள்.....

பத்தாயிரம் வர்ணங்களை
ஒன்று சேர்த்து தீட்டிய
ஓவியம் போன்ற
உன் மார்பில் தலை
சாய்க்கப் போகிறேன்.....

நாளையும் பொழுதையும்
மறந்து
நான் என்ற நிலை கடந்து
நீயாகும் நேரம்.......

ம்ம்ம்...
அட இது கற்பனைதானா....

என் காதலின் நாயகனே,
உன் நாடகத்தை
நிறுத்தி விடு...
நீ நண்பனல்ல....
காதலன் என்று கூறிவிடு.....

மௌனத்தின் அழுத்தம்....

கடலில் மிதக்கும் ஓடத்திற்கு
நடுக்கடலின்
அழுத்தம் புரிவதில்லை...........

ஓடத்தைக் காதலிக்கும் கடலின்
உணர்வுகள்
அலை ஓசையாய்
கரை சேர்ந்தபின்
ஓடத்திற்க்குப் புரியும்.....

என்னில் பயணிக்கும் உனக்கு
என் மனதின் அழுத்தம்
நன்றாய் தெரியும்.....

பிறகு ஏன்
மௌனத்தின் அழுத்தம்
புரிய வைக்கிறாய்???.........



அப்பா.....

கருவிழி தேடும்
கடவுள் நீ!

உன் ஒன்பது மணி
முத்தம்
என்னில் கண்ணீர்
வழிய வைக்கும்!

மாலை வரை
எதிர்பார்த்த
மனது
இப்போது தேம்புகிறது!

இமை மூட
உன் நெஞ்சம்
தேவை,
எங்கே சென்றாய்!

உனக்கும் எனக்கும்
உள்ள உறவு
இதுவரை
விளங்கவில்லை எனக்கு!

நீ அடிக்கடி
கேட்பதால்
அழைக்கிறேன்!
அப்பா!!

Tuesday, January 5, 2010

கண்டேன்......

உன் மனம் -என்
பகலாகக் கண்டேன்!
உன் நிறம்-என்
இரவாகக் கண்டேன்!
உன் குணம்-என்
ஓளியாகக் கண்டேன்!
உன் வார்த்தை-என்
ஒலியாகக் கண்டேன்!
என் உயிர் மட்டும்
நீயாகக் கண்டேன்!!
கடிகார முட்கள் கூட
மணிக்கு ஒரு முறை
கட்டிக்கொள்கின்றன!
அதையே
பார்த்துக்கொண்டிருக்கும்
நான்-
உன்னைக் காணக்கூட
முடிவதில்லை!

பாரம்?

வயது பத்து
வீட்டிற்கு
தலை பாரம்!
தலை மீது
பதினைந்து கிலோ பாரம்!!

மனித மனங்களை
படிக்கும் போதும்,
படித்தபின் வெறுக்கும் போதும்,
நீ மருந்தென வருகிறாய்......
நீ மறுக்கும் தருவாயில்
மரணம் அழைக்கிறது,
அழைப்பிதழ் அழகாக இருக்கிறது..........

என் இதயமும்
இரும்பு தானடா....
உன் கண்கள்
இப்படி காந்தமாகவே
இருக்கும்வரை.........

Monday, January 4, 2010

உன் வருகைக்காக,
ஆறு மணியளவில் படிக்கட்டில்
அமர்ந்தபோது,
இமை அணையினை
கண்ணீர் கடக்கவில்லை.........

ஒன்பது மணியளவில்
கன்னத்துக்காட்டில்
வெள்ளம் புகுந்தது...........

Saturday, January 2, 2010

உதிரம் அல்ல
இவ்வளவு
வலி தருவது,
அவளின் உதட்டுச்சாயம்.......

குத்துவது
கத்தி அல்ல.....
அவள் கரு விழி........
நான் இறக்கப் போவதில்லை
மீண்டும்
பிறக்கப் போகிறேன்.....

???

வாய்ப்பு கிடைக்க பெற்றிருந்தால்
நானும் உண்மையே பேசி இருப்பேன்
-தூக்கு கைதி




வாய்ப்பு கிடைக்க பெற்றிருந்தால்
நானும் தூக்கிலிடப் பட்டிருப்பேன்
-நீதிபதி

Friday, January 1, 2010

AVAN

நான்,
எல்லோராலும் அறியப்பட்ட புதிர்....
அவன்,
அப்புதிரின் விடை.....